தமிழின அழிப்பு தொடர்பாக கனடா ஒன்ராறியோ மாநில சட்டமன்றத்தில் தீர்மானம்


கனடா - ஸ்காபாரோ - றூஜ் பார்க் தொகுதிக்கான ஒன்ராறியோ மாநில சட்டமன்றத்தின் உறுப்பினர் விஜய் தணிகாசலத்தினால் ஒன்ராறியோ சட்டமன்றத்தில் தமிழின அழிப்பு தொடர்பாக கொண்டுவரப்பட்ட அறிவியற் கிழமைக்கான சட்டமூலம் சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை, மே 6, 2021ம் திகதி ஒன்ராறியோ சட்டமன்றத்தில் தமிழின அழிப்பு தொடர்பான அறிவியற் கிழமைக்கான சட்டமூலத்தை மூன்றாவது வாசிப்புக்கு விஜய் தணிகாசலம் கொண்டு வந்திருந்தார்.

இந்நிலையில், தமிழ் மக்கள் மீது இன அழிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்தும் தீர்மானங்கள் இதற்கு முன்னர் இலங்கையின் வட மாகாண சபையிலும், தமிழ்நாடு சட்டசபையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களாலும் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும், தென்னாசியாவுக்கு வெளியே இவ்வாறு ஒரு சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ள முதலாவது தீர்மானம் இதுவாகும்.

இன்னும் குறிப்பிட்டுச் சொல்வதானால், தமிழின அழிப்பு இலங்கையில் நடைபெற்றுள்ளதென்பதை அங்கீகரித்து அதனை சட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதுவே உலகின் முதலாவது வரலாற்று நிகழ்வாகும்.

இது ஒன்ராறியோவில் வாழும் 350,000 இற்கும் அதிகமான தமிழ் மக்களுக்குக் கிடைத்த வரலாற்று வெற்றியாகும்.
புதியது பழையவை