தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருக்கு நினைவு தினம்


தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபக தலைவர் அமரர் சிறி சபாரத்தினத்தின் நினைவு தினம் 06-05-2021ம் திகதி மாலை அனுஸ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமை செயலகத்தில் அமரர் சிறி சபாரத்தினத்தின் 35வது ஆண்டு நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் உபதலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளருமான பிரசன்னா இந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள்,கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரின் புகைப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

அத்துடன் உயிரிழந்ததமிழீழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபக தலைவர் அமரர் சிறி சபாரத்தினம் மற்றும் கட்சி உறுப்பினர்களின் ஆத்மசாந்திக்காக இரண்டு நிமிடம் மௌன பிரார்த்தனையும் நடாத்தப்பட்டது.

கொரனா அச்சுறுத்தல் காரணமாக சுகாதார நடைமுறைகளுடன் ஒரு சில உறுப்பினர்களின் பங்களிப்புடன் இந்த நிகழ்வு நடாத்தப்பட்டது.


புதியது பழையவை