நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலையின் காரணமாக இதுவரையில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
அத்துடன் 7 மாவட்டங்களில் 11,074 குடும்பங்களை சேர்ந்த 42,252 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை களனி மற்றும் கிங் கங்கைகளின் நீர்மட்டம் மேலும் அதிகரித்து வருவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
களனி கங்கையின் நாகலன்வீதி பகுதியில் மற்றும் கிங் கங்கையின் பத்தோகம பகுதியில் வௌ்ள நீர் மட்டம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் குறித்த பகுதிகளில் இருப்பவர்கள் அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகின்றனர்.