சீனா அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்ட மேலும் 5 இலட்சம் சைனோபார்ம் தடுப்பூசி தொகை இன்று 26-05-2021ம் திகதிஅதிகாலை இந்நாட்டை வந்தடைந்துள்ளது.
ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தில் குறித்த தடுப்பூசி தொகை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டதாக நமது செய்தியாளர் தெரிவித்தார்.
சீனா அரசாங்கத்தின் நன்கொடையாக இதற்கு முன்னர் 6 இலட்சம் சைனோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றிருந்த நிலையில் இந்த 5 இலட்சம் தடுப்பூசிகள் மேலதிகமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட தடுப்பூசி தொகையை பொறுப்பேற்பதற்காக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி உள்ளிட்ட அமைச்சர்கள் சிலர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.
இதன்போது, இந்நாட்டு சீன தூதுவரால் குறித்த தடுப்பூசி தொகை உத்தியோகபூர்வமாக இலங்கை அரசாங்கத்திற்கு ஒப்படைக்கும் நிகழ்வு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்தர்ப்பத்தில் கலந்து கொண்டிருந்த இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன, சீனாவில் உற்பத்தி செய்யப்படும் சைனோபார்ம் தடுப்பூசியை இலங்கையில் உற்பத்தி செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
