இலங்கை தொடர்பில் 81 ஆவது அறிக்கை


உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா சர்வதேச குழு மற்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மைக்கல் பச்லெட் ஆகியோரிடம் இலங்கை தொடர்பாக தவறான அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக தென்னிலங்க ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

சித்திரவதை தொடர்பில் உலகின் முதல் நாடாக இலங்கை பெயரிடப்பட்டது. சித்திரவதையின் விளைவாக ஏராளமான மக்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்பதை அவர் வெளியிடவில்லை.
மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக யஸ்மின் சூக்கா தாக்கல் செய்த 81 வது அறிக்கை இதுவாகும் எனவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை