இலங்கை கடற்பரப்பில் மற்றுமொரு கப்பலில் தீப்பரவல்..


நாட்டின் கடற்பரப்பில் மற்றுமொரு கொள்கலன் கப்பல் தீப்பரவலுக்குள்ளாகியுள்ளது.
இலங்கையில் இருந்து சிங்கப்பூர் நோக்கி பயணித்த MSC MESSINA கொள்கலன் கப்பலொன்று நேற்று(24) இவ்வாறு தீப்பரலுக்குள்ளாகியுள்ளதென கடற்படை தெரிவித்துள்ளது.

இலங்கை மற்றும் மலாக்கா நீரிணை பகுதியில் குறித்த கப்பல் தீவிபத்துக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது
MSC MESSINA கொள்கலன் கப்பலின் இயந்திர அறையில்   தீப்பரவல் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.
புதியது பழையவை