மட்டக்களப்பு-கொக்கட்டிச்சோலை முற்சந்தியின் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடப்பட்டன


நாட்டின் மேன்மைதங்கிய ஜனாதிபதி கௌரவ கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடணத்திற்கு அமைவாக நகர அபிவிருத்தி அதிகார சபையினூடாக மேற்கொள்ளப்படவிருக்கும் நூறு நகரங்களை அழகுபடுத்தும் தேசிய வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படவிருக்கிறது.

இதற்காக முதற்கட்டமாக பரிந்துரைக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்படவிருக்கும் மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ப கொக்கட்டிச்சோலை பிரதேசத்திற்கு இன்று 16-06-2021ஆம் திகதி இராஜாங்க அமச்சர் வியாழேந்திரன் நேரில் சென்று பார்வையிட்டனர்.

மட்டக்களப்பு மற்றும் கல்முனை பிராந்திய நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் மண்முனை தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் திரு புஸ்பலிங்கம் உள்ளிட்ட திணைக்களங்கள் சார்ந்த அதிகாரிகள் இவ் விஜயத்தின் போது கலந்துகொண்டனர்.

இதன் போது மண்முனை தென்மேற்கு பிரதேச சபை வளாகத்தில் இடம் பெற்ற கலந்துரையாடலின் போது கொக்கட்டிச்சோலை முற்சந்தியின் அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் சம்பந்தமாக இராஜாங்க அமச்சர் வியாழேந்திரன் அவர்களின் தலைமையில் கலந்துரையாடப்பட்டன.


புதியது பழையவை