தேசிய பட்டியல் உறுப்பினராக ரணிலின் பெயர் 18ஆம் திகதி வர்த்தமானியில் உள்ளடக்கப்படும்


ஐக்கியத் தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக பெயரிடப்பட்டுள்ள கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பெயர் எதிர்வரும் 18ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பெயர் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவினால்தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இன்று 16-06-2021ஆம் திகதி (புதன்கிழமை) காலை கையளிக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே ரணில் விக்ரமசிங்கவின் பெயர் எதிர்வரும் 18ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
புதியது பழையவை