மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டிற்கு முன் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட நபரின் சகோதரி ஸ்தலத்தில் நடந்த பல விடயங்களை அம்பலப்படுத்தியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் சுட்டுக் கொல்லப்பட்டவரின் நண்பரொருவர் நேரடி சாட்சியம் வழங்கியிருந்த நிலையில் உயிரிழந்தவரின் சகோதரி இவ்வாறு கண்ணீர் மல்க வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
அதன்படி, “ஏன் அவரை சுட வேண்டும். என்வென்றாலும் கூப்பிட்டு பேசியிருக்கலாம் தானே? அமைச்சர் இல்லாத போது பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு அங்கு என்ன வேலை? என பல கேள்விகளையும் அவர் எழுப்பியுள்ளார். அத்துடன் எனது சகோதரர் பயணித்தது சாதாரணமான, எல்லாருக்கும் பொதுவான ஒரு வீதி. என்ற போதும் இராஜாங்க அமைச்சரின் வீட்டின் முன்பாக செல்லும் போது வாகனத்திலிருந்து கீழே இறங்கி தான் செல்ல வேண்டும் என அந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் கூறியுள்ளார்.
எனது சகோதரரை தலையிலேயே சுட்டுள்ளார்கள். எனவே இந்த உண்மைகள் எல்லாம் தெரியவர வேண்டும் எனில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தனது வீட்டின் சிசிடிவி காணொளிகளை வெளிப்படுத்த வேண்டும்” எனவும் உயிரிழந்தவரின் சகோதரி கோரிக்கை விடுத்துள்ளார்.