புறக்கோட்டை போதிராஜ மாவத்தைக்கு அருகிலுள்ள இரு வர்த்தக நிலையங்களில் இன்று 24-06-2021ஆம் திகதி அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தினால் குறித்த வர்த்தக நிலையங்கள் முற்றாகச் சேதமடைந்துள்ளன.
பாடசாலை உபகரணங்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களே தீக்கிரையாகியுள்ளன.
தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்புப் பிரிவின் நான்கு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.