மட்டக்களப்பு- திருப்பழுகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு சிகிச்சைப் பெறவந்த 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று 04-06-2021ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) பெரியபோரதீவிலிருந்து சுகவீனம் காரணமாக திருப்பழுகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வந்தவர்களுக்கே கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.