உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர் கைது!



 

மட்டக்களப்பு வாழைச்சேனை காவற்துறை பிரிவிலுள்ள கூளாவடி பிரதேசத்தினை இராணுவத்தினர் இன்று வெள்ளிக்கிழமை 04-06-2021ஆம் திகதி சுற்றிவளைத்து விசேட தேடுதல் நடவடிக்கையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவரை உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் கைது செய்துள்ளதுடன் 200 லீற்றர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்திகான உபகரனங்களை மீட்டு தம்மிடம்  ஒப்படைத்துள்ளதாக வாழைச்சேனை காவற்துறையினர் தெரிவித்தனர்.


குறித்த பிரதேசத்தை இன்று காலை 7 மணியில் இருந்து பகல் 12 மணிவரை இராணுவத்தினர் விசேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்தனர். 


இந்த தேடுதல் நடவடிக்கையின்போது கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை கண்டுபிடித்தனர் இதில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட் ஒருவரை கைது செய்ததுடன் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றும். 4 கான்களில் 200 லீற்றர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கான உபகரணங்களை மீட்டனர்.


இதில் கைது செய்யப்பட்டவர் உட்பட மீட்கப்பட்ட உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி கசிப்பு உற்பத்திக்கான உபகரணங்கள், 200 லீற்றர் கோடா என்பவற்றுடன் இராணுவத்தினர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்
புதியது பழையவை