மட்டக்களப்பிலுள்ள பெரும்பாலான பகுதிகளில் கொவிட் தடுப்பூசி ஏற்றும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இப்பகுதிகளிலுள்ள மக்கள் கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இன்று 12-06-2021ஆம் திகதி சனிக்கிழமை காலை, சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.கிரிசுதன் தலைமையில், மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.மண்டபத்தில் கொவிட் தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.



