தடுப்பூசிகள் வழங்கும் செயற்பாடுகளில் கல்முனை புறக்கணிப்பு


கல்முனை மாநகர பிரதேசங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதனால், அதனைக் கட்டுப்படுத்தும் பொருட்டு துரிதகதியில் கொவிட் தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தின் 03 சுகாதாரப் பிராந்தியங்களுக்கும் 75,000 சினோபாம் தடுப்பூசிகள் வழங்கப்பட்ட போதிலும் கல்முனைப் பிராந்தியம் உள்வாங்கப்படாமல் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளமை அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும்
ஏ.எம்.றகீப் தனது கடித்தத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

காலதாமதமின்றி கொரோனாத் தொற்றில் இருந்து இப்பகுதி மக்களை பாதுகாப்பதற்காக கல்முனை மாநகர சபைக்கு போதியளவு தடுப்பூசிகள் கிடைப்பதற்கு அவசரமாக ஆவன செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
புதியது பழையவை