மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளிலுள்ள இரத்த வங்கிகளில் தற்போது குருதித் தட்டுப்பாடு நிலவி வருவதனையிட்டு பலரும் குருதி நன்கொடைகளை வழங்கிவருவதனை அவதானிக்க முடிகின்றது.
இந்நிலையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பரமசிவம் சந்திரகுமார் அவர்களின் ஏற்பாட்டில் அவரது தாயார் மரணித்து ஒருவருட நினைவை முன்னிட்டு இரத்ததான நிகழ்வொன்று மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் சனிக்கிழமை12-06-2021ஆம் திகதி இடம்பெற்றது.


