வவுனியாவில் ஆர்ப்பாட்டம்


வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவுகளினால் ஆர்பாட்டம் ஒன்று இன்று 30-06-2021ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக காலை 10.00 மணிக்கு, சுகாதார நடைமுறைகளை பின்பற்றி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘எங்கே எங்கே உறவுகள் எங்கே, கையில் ஒப்படைக்கப்பட்ட உறவுகள் எங்கே, சர்வதேசமே நீதி கொடு’ போன்ற கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதியது பழையவை