கிளிநொச்சி பூநகரி கௌதாரிமுனைப் பகுதியில், சட்டவிரோத கடலட்டை தொழில் இடம்பெற்றுவருதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி பூநகரி கௌதாரிமுனைப் பகுதியில் சீன நாட்டவர்களின் உதவியுடன் இடம்பெற்று வரும் சட்டவிரோத கடலட்டைத் தொழிலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
பூநகரி கௌதாரிமுனைப் பகுதியில் இடம்பெற்று வரும் சட்டவிரோத வளச் சுரண்டல்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் ஆராய்ந்திருந்தனர்.
அத்தோடு, கௌதாரிமுனை மக்களால் தாக்கல் செய்யப்பட்ட, சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுக்கும் வழக்குத் தொடர்பிலும், ஆராய்ந்திருந்தனர்.
இதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சீன நாட்டவர்களின் உதவியுடன் இடம்பெற்று வரும் சட்டவிரோத கடலட்டை பிடிப்புத் தொழிலை தடுப்பது தொடர்பாக இவ்வாறு குறிப்பிட்டார்.