தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் மற்றுமொரு சிங்கத்துக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
ஷீனா என்ற 12 வயது சிங்கம் ஒன்றே இவ்வாறு தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தொற்றுக்குள்ளான சிங்கம் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பேராதனை கால்நடை மருத்துவ பீடம், ராகமை வைத்திய பீடம் என்பன இணைந்து மேற்கொண்ட பரிசோதனையின் போதே, குறித்த சிங்கம் தொற்றுக்கு உள்ளாகியிருப்பது தெரியவந்துள்ளது.
தொற்றுக்குள்ளான சிங்கத்தின் உடல்நிலை மோசமான நிலையில் இல்லை என்று மிருகக்காட்சிசாலையின் பிரதானி தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் தொற்றுக்குள்ளான தோர் என்ற சிங்கம் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.