மட்டக்களப்பு- மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மட்டக்களப்பு நகரில் நேற்றையதினம் இரவு திடீர் என ஏற்பட்ட மினி சூறாவளி காரணமாக பெய்த பலத்த மழை மற்றும் காற்றின் காரணமாக மரங்கள் முறிந்து விழ்த்துள்ளன.
இதன் காரணமாக மட்டக்களப்பு நகர் பகுதியின் சில பகுதிகளில் மின்கம்பங்கள் உடைந்து மின்சாரம் தடைப்பட்டுள்ளதுடன், மரங்கள் முறிந்து சில பாதைகளில் விழுந்துள்ளமையால் பாதைகளினுடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது, சுற்று மதில்கள் உடைந்தும், வீடுகளின் கூரைகள் உடைந்த நிலையிலும் காணப்படுகின்றது.
இதனையடுத்து குறித்த மரங்களை வீதிகளில் இருந்து அகற்றும் பணிகளை மட்டக்களப்பு மாநகர சபை ஊழியர்கள் மற்றும் மின்சாரசபை ஊழியர்கள், மாநகரசபை அனர்த்த முகாமைத்துவ குழு ஆகியன இணைந்து மேற்கொண்டு வருகின்றது.