மின்சாரம் தாக்கி பெண் மரணம்


மட்டக்களப்பு மாவட்டத்தில் மின்சார உபகரணத்தில் தேனீர் தயாரித்தவேளை மின்சாரத்தினால் தாக்கப்பட்டு 56 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவமொன்று மட்டக்களப்பு- இலுப்படிச்சேனை- காரக்காடு பிரதேசத்தில் இன்று  07-06-2021ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

வந்தாறுமூலை பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான பேரின்பம் தெய்வானை என்பவரே உயிரிழந்தவரென கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

காரக்காடு பகுதியில் வசிக்கும் தனது சகோதரியின் வீட்டில் தங்கியிருந்து கல்வி கற்கின்ற தனது மகளை நலம் விசாரிக்கச்சென்றுருந்த நிலையில் அங்கு சமையல் வேலைகளை முடித்துவிட்டு தேனீர் சமைப்பதற்குத் தயாராகியுள்ளார்.

அச்சந்தர்ப்பத்தில் மின்உபகரணத்தில் சேதமடைந்திருந்த வயர் வழியாக மின்சாரம் தாக்கியதில் இவர் ஸ்தலத்திலேயே பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.

செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்த சடலத்தை திடீர் மரணவிசாரணையதிகாரி பார்வையிட்டு குடும்ப உறவினர்களிடம் வாக்குமூலங்களைப் பதிவுசெய்தார்.

அதையடுத்து உடல்கூறு மற்றும் பீசீஆர் பரிசோதனைகளுக்கான சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டது.

கரடியனாறு பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
புதியது பழையவை