எரிபொருள் விலையேற்றத்தை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது


இலங்கையில் இரவோடு இரவாக அரசாங்கம் எரிபொருள்களுக்கான விலையை அதிகரித்ததை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று, ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளர் உமாச்சந்திரா பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று12-06-2021ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாடு தற்போது எதிர்கொண்டுள்ள இக்கட்டானச் சூழலில் வருமானம் குறைந்தவர்கள், மத்தியத்தரத்தினர் அன்றாடம் தங்களது வருமானத்தைத் தேடுவதற்காக என்ன செய்வது என்று திணறிக்கொண்டிருக்கின்றனர்.
கடந்த காலங்களில் எரிபொருள்களுக்கான விலை அதிகரிக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் நாடாளுமன்றத்துக்கு சைக்கிளில் சென்று தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.
ஆனால் தற்போதைய நிலையில் சைக்கிளில் சென்று எதிர்ப்பைத் தெரிவிக்க முடியாத நிலையில் மக்கள் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
புதியது பழையவை