மெய்ப்பாதுகாவலர் தொடர்பில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்



அண்மையில் மட்டக்களப்பில் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்ட வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலர் மட்டக்களப்பு - வவுணதீவு பகுதியை சேர்ந்த நபர் தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த ஞா.சிறிநேசன் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது அவரது மெய்ப்பாதுகாவலராக செயற்பட்டவர் என தெரியவருகிறது. 

இவர் மெய்ப்பாதுகாவலராக வருவதற்கு முன்னர் பொலிஸ் துறையிலேயே இருந்தவர். அதன் பின்னர் சிறிநேசனின் வேண்டுகோளுக்கு அமைய அமைச்சரவை பாதுகாப்பு உத்தியோகத்தராக நியமிக்கப்படுகிறார்.

இதனை தொடர்ந்து சிறிநேசனிடம் நியமனம் பெற்று சுமார் ஒரு வருடத்திற்கு பின்னர் சிறிநேசனை உளவு பார்த்து அரசிற்கு அறிக்கை சமர்ப்பிக்கும் வேலையை செய்துள்ளார் என தகவல்கள் கூறுகின்றன. 

அத்துடன் த.தே.கூட்டமைப்பிலிருந்து வியாழேந்திரன் விலகுவதற்கு முன்னரே சிறிநேசன் தொடர்பான பல அரசியல் ரகசியங்களை வியாழேந்திரனுக்கு கூறியதன் அடிப்படையிலேயே வியாழேந்திரனுடன் அவர் இணைக்கப்பட்டார்.

அத்தோடு பலருக்கும் சிறிநேசனின் நடவடிக்கைகள் தொடர்பில் தகவல் கொடுத்துள்ளார்.
இதனடிப்படையிலேயே இவரை வியாழேந்திரன் தனது மெய்ப்பாதுகாவலராக நியமித்துள்ளார். 

மட்டக்களப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தோல்வியில் மிகப் பெரும் பங்கு வகித்த குறித்த மெய்ப் பாதுகாவலர் கூட்டமைப்பு தொடர்பான பல விடயங்களை திரிபுபடுத்தி அரசிற்கு அறிக்கையிட்டமையும் தற்போது வெளிவந்துள்ளது.

இவர் அமைச்சரவை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த போதும் பல முழு நேர அரசியல் நடவடிக்கைகளிலேயே தன்னை ஈடுபடுத்தியுள்ளதாக அவரது பிரதேசத்தை சேர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஒட்டு மொத்தத்தில் இவர் சிறந்த புலனாய்வு அதிகாரி என்பதுடன் அது தொடர்பில் அரசும் பல இடங்களில் திருப்திப்பட்டுள்ளமை தற்பொழுது கிடைத்துள்ள தகவலாகும்.

தொடர்புடைய செய்தி 
இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வீட்டின் முன் நடந்தது என்ன? வெடித்தது புதிய சர்ச்சை
புதியது பழையவை