யாழில் துவிச்சக்கரவண்டி பேரணி



எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து யாழ்ப்பாணத்தில் இன்று 29-06-2021ஆம் திகதி துவிச்சக்கரவண்டி பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

சண்டிலிப்பாய் பிரதேச செயலக முன்றலில் இருந்து மானிப்பாய் பிரதேச சபை வரையில் குறித்த துவிச்சக்கரவண்டி பேரணி முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பேரணியில் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, வலி.தென்மேற்கு பிரதேச சபை தலைவர் அ.ஜெபநேசன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
புதியது பழையவை