இந்தியாவிடம் உதவி கோரிய இலங்கைஇலங்கையில் தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான சிங்கத்துக்கு வைத்தியம் செய்வதற்கு இந்தியாவின் உதவி கோரப்பட்டுள்ளது.

தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளர் இசினி விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
11 வயதான 'தோர்' என்ற சிங்கத்துக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
தற்போது இந்த சிங்கம் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதுடன், அதனுடன் இருந்த ஏனைய சிங்கங்களுக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
புதியது பழையவை