தனியார் காணி ஒன்றில் அபாயகரமான வெடிபொருட்கள் மீட்பு


முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனந்தபுரம் 5ஆம் வட்டாரத்தில் தனியார் காணி ஒன்றில் அபாயகரமான வெடிபொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த காணியின் உரிமையாளர் அப்பகுதியை விவசாய நடவடிக்கைக்காக துப்பரவு செய்த போதே வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
5 இஞ்ச் எறிகணை ஒன்றும் கிபிர் விமானக்குண்டு ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மேலும் வெடிபொருட்கள் அந்த காணியில் புதைந்திருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் குறித்த வெடிபொருட்களை அங்கிருந்து மீட்பதற்கு நடவடிக்கை எடுத்துவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
புதியது பழையவை