மட்டு-மாமாங்கம் கிராமம் நான்காவது நாளாக தொடர்ந்து தனிமைப்படுத்தல்


மட்டக்களப்பு மாமாங்கம் கிராம சேவையாளர் பிரிவு தொடர்ந்து நான்காவது நாளாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குப்பட்ட மட்டக்களப்பு மாமாங்கம் கிராம சேவையாளர் பிரிவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனம்காணப்பட்டதை தொடர்ந்து அப்பகுதி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது நான்காவது நாளாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள மாமாங்கம் கிராம சேவையாளர் பிரிவில் இருந்து எந்தவொரு நபரும் வெளியில் செல்வதும், வெளிநபர்கள் மாமாங்கம் கிராம சேவையாளர் பிரிவுக்குள் வருவதும் தடைசெய்யப்பட்டுள்ளது

மாமாங்கம் கிராம பகுதிக்கு வருகை தருபவர்களை பொலிஸாரும், இராணுவத்தினர் சோதனை செய்யப்பட்டு திருப்பி அனுப்பும் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.
புதியது பழையவை