மட்டு-போரதீவுப்பற்றில் இரத்ததான முகாம்


தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வழிகாட்டலில் மட்டக்களப்பு போரதீவுப்பற்று இளைஞர் கழக சம்மேளத்தின் ஏற்பாட்டில் இன்று 28-06-2021ஆம் திகதி காலை மாபெரும் இரத்ததான முகாம் நடாத்தப்பட்டது


கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் இரத்தப்பற்றாக்குறையினை நிவர்த்திக்கும் வகையில் இந்த இரத்ததானமுகாம் நடாத்தப்பட்டது.
போரதீவுப்பற்று பிரதேச செயலக மண்டப்பத்தில் நடைபெற்ற இந்த இரத்ததான முகாம் ஆரம்ப நிகழ்வில் பிரதேசசெயலாளர் ஆர்.ராகுலநாயகி இளைஞர்கழக உத்தியோகஸ்தர், இளைஞர்கழக உறுப்பினர்கள் கலந்து கொன்டனர்.

இந்த இரத்ததான முகாமை பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்ததுடன் தொடர்ந்து பெருமளவான இளைஞர்கள் இரத்தம் வழங்கிவருகின்றனர்.
இலண்டன் அகிலன் பவுண்டேசன் ஊடாக இலங்கைக்கான அகிலன் பவுன்டேசன் இணைப்பாளரும் போரதீவுப்பற்று முன்னாள் பிரதேசசபை தவிசாளருமான வீ.ஆர்.மகேந்திரனின் அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


புதியது பழையவை