வாழ்வாதாரத்தை இழந்த குடும்பம் ஒன்றுக்கு மீன்பிடி உபகரணம் வழங்கி வைப்பு


மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசத்தில் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பம் ஒன்றுக்கு தோணி வலை வழங்கி வைப்பு.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மட்டு போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட விழாந்தோட்டம் பிரிவைச் சேர்ந்த போஷாக்கு அபாயத்துக்கு உள்ளான குடும்பத்தின் வாழ்வாதரத்தை மேம்படுத்துவதற்கு தலா 50000 ரூபாய் பெறுமதியான தோணி வலை மற்றும் உபகரணங்கள் சி.கேதீஸ் என்பவருக்கு வழங்கப்பட்டனர்.

வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக ஓசியன் ஸ்டார்ஸ் லங்கா நிறுவனத்தின் நிதி உதவியுடன் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் வைத்து பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி அவர்களினால் கையளிக்கப்பட்டது.

இதன் போது உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.புவனேந்திரன் ஓசியன் ஸ்டார்ஸ் லங்கா நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் ஷாளினி பத்மராஜா மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர்கள் பிரசன்னமாகி இருந்தனர்.
புதியது பழையவை