சிவப்பு வலயமாக மாறும் மட்டு -பெரியகல்லாறு


மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் கொரனா தொற்றாளர்களின் தொகை அதிகரித்துவருவதாக சுகாதார துறையினர் தெரிவித்தனர்.

பெரியகல்லாறு பகுதியின் 02ஆம் 03ஆம் கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியிலிருந்து பெருமளவான கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுவருவதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

பெரியகல்லாறு 03ஆம் கிராம சேவையாளர் பிரிவில் இரண்டு இடங்களில் இடம்பெற்ற மரண வீட்டுக்கு சென்று வந்தவர்களே அதிகளவில் கொரனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.
நேற்றைய தினமும் குறித்த பகுதியில் 113பேருக்கு அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அதில் 14பேர் கொரனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக குறித்த பகுதியின் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

குறித்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து அப்பகுதியில் மக்கள் அன்டிஜன் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுவருவதாகவும் சுகாதார துறையினர் தெரிவித்தனர்.
இதுவரையில் குறித்த பகுதிகளில் 94கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அப்பகுதியை சேர்ந்தவர்களும் அவர்களுடன் தொடர்புபட்டவர்களும் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார துறையினர் தெரிவித்தனர்.

புதியது பழையவை