மட்டக்களப்பு கடற்கரை பகுதியில் உயிரிழந்த நிலையில் கடல் ஆமைகள்


மட்டக்களப்பு - கிரான்குளம் பகுதியில் உயிரிழந்த நிலையில் 3 கடல் ஆமைகள் இன்றைய19-06-2021ஆம் திகதி கரையொதுங்கியுள்ளன.

அண்மையில் இலங்கை கடற்பரப்பில் வைத்து X-Press Pearl கப்பல் தீக்கிரையாகியிருந்தது.
இந்த சந்தர்ப்பத்தில் கப்பலில் இருந்து பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய சில கடலில் கலந்திருந்ததாகவும், அவற்றில் சில கடற்கரை பகுதிகளில் கரையொதுங்கிருந்ததாகவும் செய்திகள் வெளியாகியிருந்தனர்.

இதனை தொடர்ந்து ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகி வந்த நிலையில் இன்றைய தினமும் இறந்த நிலையில் 3 கடலாமைகள் கரையொதுங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை