விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தரொருவர் படுகாயம்



திருகோணமலை மாவட்டத்தின் ஹொரவ்பொத்தானை பிரதான வீதியான மிரிஸ்வெவ பகுதியில் பாண் லொறி மற்றும் மோட்டார்சைக்கிள் மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளன

குறித்த சம்பவம் இன்று21-06-2021ஆம் திகதி காலை ஏழு மணியளவில் இடம்பெற்றுள்ள நிலையில் இதன்போது மோட்டார்சைக்கிளில் பயணித்த பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயமடைந்துள்ளார்.

சம்பவத்தில் மொரவெவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் ஆர்.ஆர்.டி.சுதர்சன ரத்னாயக்க (26 வயது) என்ற பொலிஸ் உத்தியோகத்தரே படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

திருகோணமலையில் இருந்து ஹொரவ்பொத்தானை நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார்சைக்கிள் ஹொரவ்பொத்தானை பகுதியில் இருந்து வந்த பாண் விற்பனை செய்யும் லொறி மிரிஸ்வெவ உள் வீதிக்கு திரும்பிய போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளதாக தெரியவருகின்றது.

விபத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

இந்த நிலையில் விபத்துடன் தொடர்புடைய சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான விசாரணைகளை மொரவெவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
புதியது பழையவை