மட்டக்களப்பு மாவட்டத்தில் பாலியல் இலஞ்சம் கோரி பெண் ஒருவரை அச்சுறுத்திய மட்டக்களப்பு மாவட்ட பிரதேச செயலாளர் ஒருவர் அண்மையில் கையும் களவுமாக சிக்கியது தொடர்பாக எழுதியிருந்தோம்.
தற்போது குறித்த பிரதேச செயலாளர் குறித்த பெண்ணுக்கு கொலை அச்சுறுத்தல் விடுப்பதாகவும் தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை பிரதேச செயலாளர் பாலியல் இலஞ்சம் பெற்ற போது எவ்வாறு சிக்கினார் என்ற பல இரகசிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மே மாதம் 2ம் திகதி ஞாயிற்றுக்கிழமை குறித்த பெண்ணை தனது சொகுசு வாகனத்தில் ஏற்றிச் செல்லுவதற்காக கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன்னால் உள்ள பஸ் தரிப்பு நிலையத்திற்கு வருகை தந்த பிரதேச செயலாளரை குறித்த பெண்ணின் கணவர் கையும் களவுமாக பிடித்து பிரதேச செயலாளருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஆயூர்வேத மசாஜ் நிலையம் ஒன்றை திறப்பதற்கு அனுமதி கோரி பிரதேச செயலாளரிடம் சென்ற பெண்ணிடம் தொலைபேசி எண்ணை பெற்றுக்கொண்ட பிரதேச செயலாளர் பாலியல் இலஞ்சம் கோரியதுடன் தொடர்ச்சியாக வட்ஸ் அப் மூலம் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததன் படி பிரதேச செயலாளரை வசமாக சிக்கவைத்துள்ளார் குறித்த பெண்.
தற்போது குறித்த பெண்ணுக்கு தொலைபே மற்றும் போலி முகநூல் ஊடாக கொலை அச்சுறுத்தல்கள் வருவதாகவும் தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் தனக்கு பிரதேச செயலாளரால் ஏற்பட்ட பாலியல் தொல்லைகள், மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு ஒலிப்பதிவு ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.
இது குறித்து மட்டக்களப்பு மாவட்ட அமைச்சர்களோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களோ ஏன் கவனம் செலுத்த வில்லை என்ற கேள்வி எழுகிறது?
இதில் அரசாங்க உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தொடர்பு இருக்கின்றதா? என்ற சந்தேகம் நிலவுகிறது.
பாலியல் இலஞ்சம் கோரிய ஒரு பிரதேச செயலாளர் மீது அந்த மாவட்டத்தில் உள்ள உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றால் இதை விட கேவலம் இந்த மாவட்டத்திற்கு என்ன உள்ளது?
பெண்கள் அமைப்புகள் எல்லாம் கண்ணை மூடிக்கொண்டு இருப்பது ஏன்?
பிரதேச செயலகத்தில் பணி புரியும் பெண் உத்தியோகத்தர்கள் மிகுந்த அச்சத்திலும் அறுவெறுப்பிலுமே பிரதேச செயலகத்திற்கு செல்ல வேண்டி உள்ளது.
எனவே இது குறித்து அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.

