மட்டக்களப்பு மாவட்டத்தில் நிவாரண உதவிகள் - ஸ்ரீலங்காபொது ஜன பெரமுன கட்சி


நாடளாவிய ரீதியில் கொவிட் 19 தொற்று காரணமாக ஏற்படுத்தப்பட்டிருந்த பிரயாணத்தடையால் மட்டக்களப்பு மாவட்டத்திலும் வாழ்வாதரத்தை இழந்த மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொவிட் பயணத்தடையால் பாதிக்கப்பட்டு மிகவும் வறிய நிலையிலுள்ள வாழ்வாதாரத்தை இளந்த பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கே ஸ்ரீலங்காபொது ஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரின் சொந்த நிதியிலிருந்து கடந்த சில நாட்களாக நிவாரணப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுவருகின்றன.

ஸ்ரீலங்காபொது ஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பிரதேச செயலகங்களுக்குரிய அபிவிருத்தி குழுக்களின் பிரதித் தலைவருமான பரமசிவம் சந்திரகுமார் அவர்களின் சொந்த நிதியிலிருந்து குறித்த உலர் உணவு பொருட்கள் இன்றும் மாவட்டத்தின் சில பகுதிகளில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கட்டங் கட்டமாக மாவட்டம் பூராகவும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுவரும் நிலையில் போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும், களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட களுதாவளை கிராம உத்தியோகத்தர் பிரிவிலும் தெரிவு செய்யப்பட்ட பல குடும்பங்களிற்கு உலர் உணவு பொதிகள் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது கட்சியின் மகளீர் அணித்தலைவி திருமதி.எஸ்.காந்தரூபி மற்றும் மகளீர் அணியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சியின் முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டிருந்ததுடன், நிவாரண உதவிகளையும் வழங்கிவைத்திருந்தனர்.


புதியது பழையவை