கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தபால் சேவை இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய கடிதங்கள் விநியோகிக்கும் நடவடிக்கை மீண்டும் இன்று 21-06-2021ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பிரதிதபால் மா அதிபர் ராஜித்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து தபால் அலுவலகங்களும் இன்று முற்பகல் 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை பொது மக்கள் சேவைக்காக திறக்கப்பட்டிருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.
அத்தியாவசிய சேவைகளில் தபால் சேவை இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
இதேவேளை பயணக்கட்டுப்பாடு காரணமாக சுமார் 10 இலட்சம் கடிதங்கள் நிலுவையில் காணப்படுவதாகவும் பிரதி தபால் மா அதிபர் ராஜித்த ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.