வரலாற்று பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய இவ்வருட வருடாந்த உற்சவத்தின் தற்போதுள்ள கொரோனா தொற்று அபாய சூழ்நிலையின் காரணமாக 100 பேருடன் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் உற்சவத்தினை நடாத்துவதற்கு சுகாதார பிரிவினரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த உற்சவ நிகழ்வுகளில் பங்குபற்ற 100 பேருக்கு மாத்திரமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
சுகாதார நடைமுறைகளை கடுமையாக பின்பற்றி வருடாந்த ஆலய உற்சவத்தினை நடாத்த முடியும் என பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் தொண்டைமானாறு வருடாந்த மகோற்சவம் தொடர்பில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த கூட்டத்தில் பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவினர்,பருத்தித்துறை பிரதேச செயலர்,வல்வெட்டித்துறை பொலிஸார், இராணுவத்தினர் ,சுகாதாரப் பிரிவினர் ஆலய நிர்வாகத்தினர் கலந்துகொண்டனர்.
