24 மணி நேரத்தில் 68 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 68 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 68 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் 22பேரும்இசெங்கலடி வைத்திய அதிகாரிகள் பிரிவில் 11பேரும்.வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் 10 பேர் உட்பட 68 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் இதுவரை மாவட்டத்தில் 8275 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 116பேர் உயிரிழந்துள்ளதுடன் 755 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருகின்றதாகவும் .இறப்புகளில் 69 வீதமான இறப்பானது 60வயதுக்கும் மேற்பட்டவர்களாகவுள்ளனர்.

மூன்றாவது அலை காரணமாக 7292பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன் 107மரணங்களும் ஏற்பட்டுள்ளதாகவும்
மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் 320221 தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளது. இதுவரையில் 142754 கொவிட் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட 46 வீதமானவர்களுக்கு இதுவரையில் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாகவும் மேலும் ஒரு இலட்சம் தடுப்பூசிகள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கிடைக்கப்பெறவுள்ளதாகவும் டாக்டர் மயூரன் தெரிவித்தார்.
புதியது பழையவை