50,000 ஸ்புட்னிக் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன


50,000 ஸ்புட்னிக் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக ஒளடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமுன தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிலுள்ள கெமலாய வைத்திய உற்பத்தி நிறுவனத்திலிருந்து கொண்டுவரப்பட்ட 50,000 ஸ்புட்டினிக் தடுப்பூசிகள், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை