கதிர்காமத்தில் துப்பாக்கிச் சூட்டில் 52 வயதுடைய நபர் பலி


கதிர்காமத்தில் நேற்று இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 52 வயதுடைய நபர் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும், பாதிக்கப்பட்டவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

துப்பாக்கிச் சூட்டை நடத்தியவரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
எனினும் துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர் யால வனப்பகுதிக்கு தப்பிச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இவரை கைது செய்ய பொலிஸாரும், விசேட அதிரடிப்படையும் இணைந்து தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
புதியது பழையவை