நாரம்மல பகுதியில் 8 கோடி 35 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களைக் காரில் கொண்டு சென்ற சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
39 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இவரிடமிருந்து ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஹெரோயின் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
அதேவேளை, 40 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் அட்டியடியவில் 32 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
