ஹிசாலினிக்கு நீதிவேண்டும் -தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி கண்டனம்

பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியூதினின் வீட்டில் சிறுமி ஒருவர் எரிக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டதற்கு கடுமையான கண்டனம் வெளியிட்டுள்ள மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள்,குறித்த சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி சரியான விசாரணையினை உறுதிப்படுத்தவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பிலான ஊடக சந்திப்பு மட்டக்களப்பில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.
சிறுவர்கள் வேலைக்கு அமர்தப்படுவது தொடர்பான சட்ட திட்டங்கள் மீறப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

குறித்த சிறுமியின் படுகொலை தொடர்பில் உண்மைத்தன்மைகள் வெளிக்கொணரப்பட்டு உரியவர்களுக்கு தண்டனை வழங்கப்படவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

சிறுவர்,பெண்களுக்கான தனியான நீதிமன்றங்களை உருவாக்கி அதன் மூலம் சிறுவர்கள்,பெண்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க அரசாங்கம் முன்வரவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த ஊடக சந்திப்பில் வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர் திருமதி சோபா ஜெரஞ்சித் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் எஸ்.எம்.கிறிஸ்டினா ஆகியோர் இதன்போது கருத்து தெரிவித்தனர்.
புதியது பழையவை