துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி


ஊருகஸ்மங்ஹன்திய தேவத்த பகுதியில், நேற்று (2) இரவு, 10.30 மணியளவில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

போதைப் பொருள் பாவனைக்கு அடிமையான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

குறித்த நபர் தனது வீட்டுக்கு அருகில் நின்றுக்கொண்டிருந்தபோது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
புதியது பழையவை