ஆசிரியர் துறைக்கு ஏன் வந்தோம் – விரக்தியில் ஆசிரியர்கள்

இலங்கையில் ஆசிரியர் துறைக்கு ஏன் வந்தோம் என்று நினைக்குமளவுக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (19) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கம் வீட்டுக்குப் போக வேண்டும் என்பதில், எதிர்க் கட்சிக்கு வாக்களித்த மக்கள் மட்டுமன்றி அரசாங்கத்தை அமைப்பதற்காக பாடுபட்ட அனைத்து மக்களும் வீதிக்கு இறங்கி போராடும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

வரலாற்றில் ஒரு நாளேனும் வீதிக்கு இறங்காத இந்த அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்காக முன்னின்று உழைத்த ஆசிரியர்கள், வீதிக்கு இறங்கும் வகையில் இந்த அரசாங்கம் நடந்துகொண்டுள்ளது.

ஆசிரியர்களை பிரச்சினைக்கு உள்ளாக்கிய இந்த அரசாங்கம், அவர்களது சம்பளம் மற்றும் அவர்களது பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு செயற்படாததுடன் முழு கல்வித்துறையும் பாதிப்படையச் செய்துள்ளது.

இன்று ஆசிரியர்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். ஆசிரியர் துறைக்கு வந்து வாழ்வை வீணடித்துவிட்டோமா என்று நினைக்குமளவுக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவர்களை தங்களது பிள்ளைகளாக நினைத்து சேவையாற்றக்கூடியவர்கள். தற்போதைய நிலையில் தங்களது மாணவர்களின் கல்விநிலை குறித்து ஆசிரியர்களும் கவலையில் உள்ளனர்.

இவ்வாறான நிலையில் ஆசிரியர்கள் குறித்து அவதூறாக பேசியவர்கள் தொடர்பிலும் நினைவூட்ட வேண்டியுள்ளது.
ஆசிரியர்களை அவதூறாக பேசியவர், ஆசிரியர் ஒருவரிடம் கல்வி கற்றுவந்தவரா என்று கேள்வி கேட்கத் தோன்றுகிறது.
புதியது பழையவை