இலங்கை சதுரங்க சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'National Rapid championship 2021 Novice’ திறந்த சுற்றுப்போட்டிகளில் ஒரு பிரிவாக வடக்கு கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களை இணைத்ததான பெண்கள் பிரிவுப் போட்டிகள் கடந்த ஜீலை 17,18ம் திகதிகளில் நடைபெற்றது.
இதில் மட்/கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயத்தில் தரம் 03ல் கல்வி பயிலும் மாணவியான செல்வி ரித்திகா ஷமி-ரஜனிக்காந் அவர்கள் 7 சுற்றுக்கள் கொண்ட போட்டியில் 6 சுற்றுக்களில் வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தை தனதாக்கியுள்ளார்.
இவர்‘Singing fish chess club’வீராங்கனை என்பதும் குறிப்பிடத்தக்கது மேலும் இப்போட்டியில் முதல் 14 இடங்களைப் பெற்ற வீராங்கனைகள் அடுத்தகட்ட போட்டிகளான'‘NationalRapid championship 2021 Majors divison’ போட்டிகளில் பங்குபெறும் தகுதியினை பெற்றுள்ளனர்.

