ஹிஷாலினியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது!


நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் வீட்டில் பணிப் பெண்ணாக கடமைபுரிந்த நிலையில் உயிரிழந்த சிறுமியின் சடலம் இரண்டாவது பிரேத பரிசோதனை நிமித்தம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு − புதுக்கடை நீதவான் நீதிமன்ற உத்தரவுக்கமைய, நுவரெலியா நீதவான் முன்னிலையில் குறித்த சடலம் இன்று தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சிறுமியின் சடலம் இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதியது பழையவை