மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவுஇயந்திரத்தின் மீது துப்பாக்கிச் சூடு

அரியாலை கிழக்கு பூம்புகார் பகுதியில் நேற்று இரவு சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது எனினும் உழவு இயந்திரத்தில் பயணித்த மூவர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

உழவு இயந்திரத்தின் ரயர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமையால் உழவு இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி குடைசாய்ந்துள்ளது
இன்று (24)அதிகாலை 1 .40 மணி அளவில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தினை கடமையில் இருந்த பொலிசார் மறித்த போது வாகனம் நிறுத்தாது சென்றதன் காரணமாக உழவு இயந்திரத்தின் சில்லுபகுதி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் எனினும் துப்பாக்கிப் பிரயோகத்தை அடுத்து உழவு இயந்திரத்தில் பயணித்த மூவரும் தப்பிச் சென்றுள்ளதாக யாழ்ப்பாணபொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தெரிவித்தார்.
புதியது பழையவை