வவுனியாவில் முகச்சவரம் செய்யும் நிலையத்தில் கொரோனா

வவுனியா சந்தை வீதியில் அமைந்துள்ள முகச்சவரம் செய்யும் நிலையத்தில் பணிபுரியும் மூவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதனையடுத்து குறித்த வீதியுடனான போக்குவரத்து, இராணுவத்தால் துண்டிக்கப்பட்டு, தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

முடக்கப்பட்ட பகுதியில் அமைந்துள்ள வியாபாரநிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களிற்கு சுகாதார பரிசோதகர்களால் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை