கல்முனை பிராந்தியத்தில் சினோபாம் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு இன்று(24) (சனிக்கிழமை) காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் வழிகாட்டலுக்கமைய 13 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில், தடுப்பூசிகள் செலுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த செயற்பாடு தொடர்பாக சுகாதார பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் மேலும் தெரிவித்துள்ளதாவது, “சினோபாம் மிகச் சிறப்பாக தொழிற்படும் தடுப்பூசியாக இலங்கையில் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே கொரோனாவில் இருந்து ஒவ்வொருவரும் தங்களை பாதுகாத்துகொள்ளும் பொருட்டு இந்த தடுப்பூசியை செலுத்திக்கொள்வது நல்லது.



