திருகோணமலை - குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜாயா நகர் பகுதியில் டைனமைட் வெடித்ததில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் இன்று 07-07-2021ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது, .
டைனமைட் என்றழைக்கப்படும் வெடி பொருளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது டைனமைட் வெடித்ததில் மூன்று பேரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் குச்சவெளி-ஜாயாநகர் பகுதியைச் சேர்ந்த இமாம்தீன் அஷ்மீர் (26வயது) எனவும் தெரியவருகின்றது.
உயிரிழந்த குறித்த நபரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.