பிரபல தொலைக்காட்சியை முடக்க அரசாங்கம் முயற்சி?


இலங்கையில் மிகவும் பிரபலம்வாய்ந்த தொலைக்காட்சிகளில் ஒன்றான சிரச, சக்தி தொலைக்காட்சி அலைவரிசையை இடைநிறுத்த அரசாங்கம் முயற்சிப்பதாகத் தெரிவித்து நாடாளுமன்றில் இன்று(07) பாரிய சர்ச்சை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ, சபையில் விசேட அறிவிப்பொன்ற இன்று வெளியிட்டு, சிரச தொலைக்காட்சி வலையமைப்பு மீது அரசாங்கம் முன்னெடுக்க உத்தேசித்துள்ள தடையுத்தரவு தொடர்பில் அம்பலப்படுத்தியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அரச தரப்பினருக்கும், எதிர்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே கடும் சொற்போர் ஏற்பட்டதால் நாடாளுமன்றத்தில் கடும் அமைதியின்மை ஏற்பட்டது.
புதியது பழையவை