வவுனியா புதிய சின்னப்புதுக்குளம் கிராம மக்கள், கற்குவாரியால் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், நேரில் சென்று ஆராய்ந்துள்ளார்.
தமது சொந்த நலனுக்காக, ஒருசில அதிகாரிகள் எடுக்கும் தவறான முடிவுகளால், மக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
வவுனியா புதிய சின்னப்புதுக்குளம் பகுதியில் செயற்பட்டு வரும் கற்குவாரியால், அந்தப்பகுதி மக்கள் பல்வேறு ஆபத்துக்களை எதிர்நோக்கியுள்ளனர்.

